/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் குழாய் பராமரிப்பு பணி ஒப்பந்தம் நீட்டிக்க முடிவு
/
குடிநீர் குழாய் பராமரிப்பு பணி ஒப்பந்தம் நீட்டிக்க முடிவு
குடிநீர் குழாய் பராமரிப்பு பணி ஒப்பந்தம் நீட்டிக்க முடிவு
குடிநீர் குழாய் பராமரிப்பு பணி ஒப்பந்தம் நீட்டிக்க முடிவு
ADDED : ஆக 07, 2024 10:35 PM
குன்னுார் : குன்னுாரில் வீணாகும் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிகளின் ஒப்பந்தம் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளுக்கு ரேலியா அணை மற்றும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் உட்பட பல்வேறு நீராதாரங்களில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
பல்வேறு இடங்களிலும் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்கிறது. ஏற்கனவே இது போன்று குடிநீர் வீணான நிலையில், குடிநீரை முறையாக வழங்காததால் குமரன் நகர் மக்களும் மறியல் போராட்டமும் நடத்தினர்.
சில நேரங்களில் பிரதான குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி செல்வது தொடர்ந்தது. இதனால், பல இடங்களிலும் மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.
சரி நேரத்தில் நகராட்சி குடிநீர் வினியோக பணியாளர்கள் குறைவாக உள்ளதாகவும் குடிநீர் வினியோகம் மற்றும் குழாய் பழுது பார்க்கும் பணிகள் தாமதம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
நகராட்சி சார்பில் நாள் ஒன்றுக்கு, 864 ரூபாய் என நிர்ணயம் செய்து, 6 வெளி பணியாளர்களின் ஒப்பந்தம் நிறைவு பெற்றுள்ள நிலையில், பணிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது.
இதனைத் தொடர்ந்து, இந்த பணிகளை தொடரும் வகையில், மூன்று மாத காலத்திற்கு நீட்டித்து கொடுக்க அனுமதிக்க கோரப்பட்டது.
இதற்கு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுமதி வழங்கப்பட்டது.