ADDED : ஏப் 01, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;ஊட்டியில் நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்ட இளம் பெண்ணுக்கு ஆம்புலன்சில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்த ரோஸ்லின், 28. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டனர்.
ஆம்புலன்ஸ் வந்து அழைத்து சென்ற போது, அங்கேயே பிரசவ வலி ஏற்பட்டு, அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஊட்டி அரசு மருத்துவ மனையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

