/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தீவிரம்
/
பஸ் ஸ்டாண்ட் கட்டடத்தை இடிக்கும் பணிகள் தீவிரம்
ADDED : மார் 28, 2024 05:40 AM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இரண்டாவது அடுக்கு கட்டடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் 4 அடுக்குகளாக உள்ளன. முதல் அடுக்கில் கோவை செல்லும் பஸ்களும், இரண்டாவது அடுக்கில், திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம், கோபி, புளியம்பட்டி, ஆகிய பஸ்களும் நிறுத்தப்படும்.
மூன்றாவது அடுக்கில் டவுன் பஸ்களும், நான்காவது அடுக்கில் ஊட்டி கோத்தகிரி, குன்னூர், கூடலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டை நவீனப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து, பஸ்கள் நிற்கும் இடங்கள், கடைகளை இடித்துவிட்டு ரூ.8.63 கோடி மதிப்பில் புதிதாக கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டாவது அடுக்கு முற்றிலும் இடிக்கப்படுகிறது. பொக்லைன், இயந்திரங்கள் உதவியுடன் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன, என்றார்.-