நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஞ்சூர்:
குந்தா தாலுகா, விவசாயிகள் சங்கம் சார்பில், எடக்காடு தபால் நிலையம் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், 'கிசான் தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்; கிஷான் தொகை, 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்டில், நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்; ஒரு மாவட்டம் ஒரு உற்பத்தி என்பதன் அடிப்படையில், நீலகிரி தேயிலை உற்பத்தி செலவுடன் கூடிய ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; நாட்டிலுள்ள அனைத்து விவசாய விலை பொருட்களுக்கும் குறைந்த பட்சம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.