/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுப்பு; கோத்தகிரியில் தொடரும் 'பார்க்கிங்' பிரச்னை

ADDED : ஆக 06, 2024 09:52 PM

கோத்தகிரி : கோத்தகிரி பஸ் நிலையம் 'பார்க்கிங்' தளத்தில், வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது.
கோத்தகிரி பஸ் நிலையத்தில், ஊட்டி மற்றும் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ் நிறுத்தம் அருகே, 'பார்க்கிங்' தளம் உள்ளது. இந்த தளத்தில் ஒரு இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடுப்பகுதியில் குழி ஏற்பட்டது.
இதனால், பாதுகாப்பு கருதி, வாகனங்கள் நிறுத்த முடியாதவாறு போலீசார், 'பேரிகார்டு' வைத்து மறித்தனர். இந்நிலையில், குழி மூடப்பட்டு, பணிகள் முழுமையாக நிறைவடைந்தும், பேரி கார்டு அகற்றாமல் வாகனங்கள் நிறுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்த பார்க்கிங் தளத்தில், 20க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தவிர கிராமப்புறங்களில் இருந்து, அவசர தேவைக்காக வரும் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெருகிவரும் வாகன இயக்கத்திற்கு ஏற்ப, பஸ் நிலையம் பார்க்கிங் தளத்தை திறந்து, வாகனங்கள் நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.