/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்து வரும் சாலை: பொதுமக்கள் அதிருப்தி
/
சேதமடைந்து வரும் சாலை: பொதுமக்கள் அதிருப்தி
ADDED : செப் 03, 2024 02:16 AM

கூடலுார்;கூடலுார் செம்பாலா அருகே, கோழிக்கோடு சாலை தொடர்ந்து சேதமடைந்து வருவதால் டிரைவர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து, கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, நாடுகாணி, தேவாலா, பந்தலுார், சேரம்பாடி மற்றும் கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இச்சாலையில், பெரும்பாலான பகுதிகள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது.
ஆனால், கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரை, 2 கி.மீ., துார சாலை சீரமைக்கவில்லை. இப்பகுதி சாலை சேதமடைந்து வருகிறது.
செம்பாலா, தனியார் பள்ளி அருகே சாலையில் ஏற்பட்ட குழிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அப்பகுதியை கடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை, சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் டிரைவர்கள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'தனியார் பள்ளி நுழைவு வாயில் அருகே, சேதமடைந்துள்ள சாலையை மாணவர்கள் கடந்து செல்லவும், வாகனங்களை இயக்கவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.