/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளர்ச்சி திட்ட பணி அறிவிப்பு போர்டு: மறுக்கும் உள்ளாட்சி அமைப்புகள்
/
வளர்ச்சி திட்ட பணி அறிவிப்பு போர்டு: மறுக்கும் உள்ளாட்சி அமைப்புகள்
வளர்ச்சி திட்ட பணி அறிவிப்பு போர்டு: மறுக்கும் உள்ளாட்சி அமைப்புகள்
வளர்ச்சி திட்ட பணி அறிவிப்பு போர்டு: மறுக்கும் உள்ளாட்சி அமைப்புகள்
ADDED : ஏப் 24, 2024 09:51 PM
குன்னுார் : 'குன்னுாரில் உள்ளாட்சி மூலம் மேற்கொள்ளும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அறிவிப்பு பலகைகளை உரிய முறையில் வைப்பது இல்லை,' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'மாநில அரசின் மூலம் நகராட்சி உட்பட அனைத்து உள்ளாட்சிகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த அறிவிப்பு போர்டுகள் பணிகள் துவங்கிய உடனே வைக்க வேண்டும்,' என்ற அரசு உத்தரவு உள்ளது.
ஆனால், குன்னுார் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அறிவிப்பு போர்டுகள் முறையாக எங்கும் வைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''அரசு உத்தரவின்படி, அரசு கட்டுமான பணிகள் நடக்கும் பகுதியில் மேற்கொள்ளப்படும் பணி அளவு விபரம், பணிக்கான தேவை, மதிப்பீட்டுத் தொகை, ஒப்பந்ததாரர் விபரம், பணி துவங்கும் நாள், பணி முடியும் நாள் போன்ற அறிவிப்பு போர்டுகளில் எழுதி மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
குன்னுார் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு, 1.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யும் பராமரிப்பு வேலைகள் குறித்த அறிவிப்பு போர்டுகள் மக்களின் பார்வைக்கு தெரியும்படி எங்கும் வைக்கப்படவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, அரசு கட்டுமான பணிகளில் வெளிப்படைத்தன்மை, லஞ்சம் ஊழல் இல்லாத நிர்வாகம் ஆகியவற்றை உறுதி செய்ய இந்த அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும், என்றார்.

