/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலூர் நகராட்சியில் ரூ.89 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள்
/
கூடலூர் நகராட்சியில் ரூ.89 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள்
கூடலூர் நகராட்சியில் ரூ.89 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள்
கூடலூர் நகராட்சியில் ரூ.89 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள்
ADDED : ஜூலை 03, 2024 10:00 PM
பெ.நா.பாளையம் : கூடலூர் நகராட்சியில், 89 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி சார்பில் மன்ற கூட்டம் நடத்த அரங்கம் இல்லாமல் இருந்தது. பொது நிதியின் கீழ், 31 லட்ச ரூபாய் செலவில் புதிய கூட்ட அரங்கு அலுவலகத்தின் முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ளது.
இதை நகராட்சி தலைவர் அறிவரசு திறந்து வைத்தார். லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு நகர் மன்ற கூட்டம் நடந்தது.
இதில், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய தார் சாலைகள் மற்றும் வடிகால்கள் அமைக்க, 58.50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதே போல புதிய தெரு விளக்குகள் அமைக்க, 18 லட்சம் ரூபாய், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ள, 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி ஆணையாளர் மனோகரன், துணை தலைவர் ரதி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.