/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முருகன் கோவில் திருவிழா காவடி எடுத்த பக்தர்கள்
/
முருகன் கோவில் திருவிழா காவடி எடுத்த பக்தர்கள்
ADDED : மார் 28, 2024 03:50 AM

பந்தலுார் : பந்தலுார் அருகே, பந்தபிலா கிராமத்தில் ஸ்ரீ திருக்குமரன் ஆலய ஒன்பதாம் ஆண்டு தேர் திருவிழா, 24ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகளும் பிரசாதம் வழங்குதல், சிறப்பு பூஜைகள் நடந்தது.
நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை, அதனை தொடர்ந்து பொன்னானி ஆட்டங்கரையில் இருந்து பால்குடம், பன்னீர் குடம், தீர்க்க குடம், பறவை காவடி மற்றும் காவடி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
பக்தர்கள் பக்தியுடன் பங்கேற்று முருகன் பாடல்களை பாடி, கோவிலுக்கு காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து சென்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அன்னதானமும், மாலை தேர் ஊர்வலமும் நடந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தர்மகர்த்தா அடைக்கலம், தலைவர் பீமன், செயலாளர் மோகன், பொருளாளர் யோகராஜ் உட்பட பலர் செய்திருந்தனர்.