/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'லெவல் கிராசிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் சிரமம்
/
'லெவல் கிராசிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் சிரமம்
'லெவல் கிராசிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் சிரமம்
'லெவல் கிராசிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் சிரமம்
ADDED : ஜூலை 06, 2024 01:23 AM
குன்னுார்;'குன்னுார் 'லெவல் கிராசிங்' பகுதியில் போலீசாரின் வாகனங்கள் நிறுத்துவதை தடுப்பதுடன் சுகாதாரம் பாதிக்காத வகையில், பூங்காவாக மாற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் 'லெவல் கிராசிங்' அருகே மேட்டுப்பாளையம் பஸ்ஸ்டாப். போக்குவரத்து போலீசார் அறை உள்ளது. 4 ரோடுகள் சந்திக்கும் இந்த இடத்தில் போக்குவரத்து போலீசாரின் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் சாலையில் மக்கள் நடந்து செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,'மிகவும் குறுகலான இந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்கள் எப்போதும் நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மட்டுமின்றி மக்கள் நடந்து செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. ஏற்கனவே, எஸ்.பி., உத்தரவின் பேரில் இங்கு பைக்குகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்த போதும் அதனை பின்பற்றுவதில்லை.
மக்கள் நடந்து செல்லும் அளவில் இடம் விட்டு காலி இடங்களில், மலர் செடிகள் நடவு செய்து சிறிய பூங்கா அமைக்க வேண்டும், பஸ் ஸ்டாப் அருகே 'இ--டாய்லெட்' அமைக்க வேண்டும்,'என்றனர்.
போலீசார் கூறுகையில், 'இங்கு பஸ்சில் இருந்து இறங்கி வருபவர்கள் அசுத்தம் செய்கின்றனர். கடும் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் தான் பைக்குகள் நிறுத்தப்படுகிறது,' என்றனர்.