/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சிரமம் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
/
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சிரமம் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சிரமம் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சிரமம் துாய்மை பணியாளர்கள் பாதிப்பு
ADDED : ஏப் 12, 2024 11:39 PM

குன்னுார்:குன்னுார் நகராட்சியில் துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணி செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகளில் குப்பைகள் அகற்றவும், துாய்மை பணிகளை மேற்கொள்ளவும், 61 நிரந்தர தொழிலாளர்கள் உட்பட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்த துாய்மை பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் நகராட்சி சார்பில் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, கம்பூட், ரப்பர் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதில், கைகளில் எடுக்கும் பாட்டில் துண்டுகளால் காயம் ஏற்படுகிறது. கழிவுநீரில் சாதாரண செருப்பு அணிந்து சிரமத்துடன் பணியாற்றுகின்றனர். மூடப்பட்ட கழிவுநீர் தொட்டிக்குள் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இறங்குகின்றனர். நேற்று மார்க்கெட்டில் மழையால் கழிவுநீர் கால்வாய் உடைந்து கடைகளுக்குள்ளும், நடைபாதையிலும் சேறும் சகதியும் சேர்ந்தது. இதனை அகற்றும் போது துாய்மை பணியாளர்களுக்கு எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத நிலையில் சிரமத்துடன் தூய்மை படுத்தினர்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'கையுறைகள் அடிக்கடி கிழிந்துவிடும். அதேபோல பல மாதங்களுக்கு முன்பு வழங்கிய கம்யூட் உட்பட பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது,'என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே உபகரணங்கள் வழங்கப்பட்டது. உடனடியாக வழங்கப்படும்,'என்றனர்.

