/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சல்லீவன் நினைவு பூங்கா திறக்காததால் ஏமாற்றம்
/
சல்லீவன் நினைவு பூங்கா திறக்காததால் ஏமாற்றம்
ADDED : மே 03, 2024 01:19 AM

கோத்தகிரி;கோத்தகிரி ஜான் சல்லீவன் நினைவு பூங்கா, திறக்கப்படாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டரான ஜான் சல்லீவன், கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில், அலுவலகம் அமைத்து மாவட்டத்தை நிர்வகித்தார். பிறகு, அலுவலகம்ஊட்டிக்கு மாற்றப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு பின், மிகவும் சேதமடைந்த கன்னேரிமுக்கு முதல் கலெக்டர் அலுவலகம், பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. அந்த வளாகத்தில் சல்லீவனின் உருவ சிலை அமைக்கப்பட்டது. தற்போது, நினைவிடம் மாவட்ட ஆவண காப்பகமாக விளங்கி வருகிறது.
'இந்த நினைவகம் அருகே, கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான நிலத்தில் நினைவு பூங்கா அமைக்க வேண்டும்,' என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில் பூங்கா அமைக்கும் பணி நடந்தது.
பூங்கா அலங்கார முகப்பு வாயில், நடைபாதை, புல்வெளி, செயற்கை நீரூற்று உட்பட, இருக்ககைகள் அமைக்கப்பட்டு மலர் நாற்றுகள் நடுவு செய்யப்பட்டுஉள்ளது. பணிகள் முழுமை பெறாத நிலையில், பூங்காவை திறக்கும் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
நடப்பாண்டு கோடை விழா நிகழ்வுகளாக, ஊட்டிதாவரவியல் பூங்காவில் மலர்கண்காட்சி மற்றும் குன்னுார் சிம்ஸ் பூங்காவில்பழக் கண்காட்சிகள் மட்டுமே நடத்தப்படுகிறது.
கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி கூடலுாரில் வாசனை திரவிய கண்காட்சி நடப்பாண்டு நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கோத்தகிரியில் உள்ள சுற்றுலா மையங்களை காண தவறுவதில்லை.
இந்நிலையில், சல்லீவன் நினைவிடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பூங்கா திறக்காமல் உள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.