/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மயான பகுதியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கிராம மக்கள் எதிர்ப்பை மீறி பூஜையிட்டதால் அதிருப்தி

ADDED : ஜூலை 05, 2024 01:47 AM

ஊட்டி;மஞ்சனக்கொரை மயான பகுதியில் துவக்கப்பட உள்ள, குப்பையிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட கோரி, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சனக்கொரை பகுதியில் மயானம் உள்ளது. இப்பகுதியில் நகராட்சி சார்பில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்க பூஜை நடத்தப்பட்டது. இந்த திட்டத்தால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. இங்கு இத்திட்டம் துவக்க கிராம மக்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தும். அங்கு பூமி பூஜை நடந்துள்ளது.
கிராம மக்கள் கூறுகையில், 'மஞ்சனக்கொரை மயான பகுதியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகம் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்திட்டத்தை நகராட்சி நிர்வாகம் உடனே கைவிட வேண்டும். இது குறித்து கிராம மக்கள் சார்பில் நகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து புகார் மனு கொடுத்துள்ளோம். இந்த திட்டத்தை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வில்லையேல் போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.