/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கோடை காலத்தில் மக்கள் அதிருப்தி
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கோடை காலத்தில் மக்கள் அதிருப்தி
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கோடை காலத்தில் மக்கள் அதிருப்தி
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கோடை காலத்தில் மக்கள் அதிருப்தி
ADDED : மார் 29, 2024 10:18 PM

கூடலுார்;'கூடலுார் துப்பு குட்டிபேட்டை அருகே, குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுாரில் கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், நகராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் நீர் ஆதாரங்களில் தொடர்ந்து நீர் வரத்து குறைந்து வருகிறது.
இதேநிலை தொடர்ந்தால், கோடையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சில இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து, சீரமைத்து வருகின்றனர். இந்நிலையில், கூடலுாரில் இருந்து நர்த்தகி பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும், குழாய் சாலையினுள் சேதமடைந்து, சாலை வழியாக குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்நிலைத் தொடர்கிறது. இதனை, சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'கோடையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற குழாய்கள் ஏற்படும் சேதத்தை உடனடியாக சீரமைப்பு மூலம், குடிநீர் வீணாகுவதை தடுக்க முடியும்.
இதற்கான நடவடிக்கையை நகராட்சி துரிதப்படுத்த வேண்டும்,' என்றனர்.