/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் மாசடைந்த குடிநீரால் அதிருப்தி
/
ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் மாசடைந்த குடிநீரால் அதிருப்தி
ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் மாசடைந்த குடிநீரால் அதிருப்தி
ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் மாசடைந்த குடிநீரால் அதிருப்தி
ADDED : பிப் 24, 2025 10:19 PM
ஊட்டி, ; ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் மாசடைந்த குடிநீரால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 'பாம்பே' கேசில் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு பார்சன்ஸ்வேலி நீராதாரத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக, இப்பகுதியில் வினியோகம் செய்யப்படும் குடிநீர் மாசடைந்து வந்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை அப்பகுதியில் இருந்து குடிநீர் மாசு குறித்து எவ்வித புகாரும் வரவில்லை. எனினும், ஊழியர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.