/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வீடுகளில் இருந்து ஓட்டளிக்கலாம்; 12டி படிவங்கள் வினியோகம்
/
வீடுகளில் இருந்து ஓட்டளிக்கலாம்; 12டி படிவங்கள் வினியோகம்
வீடுகளில் இருந்து ஓட்டளிக்கலாம்; 12டி படிவங்கள் வினியோகம்
வீடுகளில் இருந்து ஓட்டளிக்கலாம்; 12டி படிவங்கள் வினியோகம்
ADDED : மார் 25, 2024 12:25 AM
ஊட்டி;ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட, இந்திரா காலனியில், எதிர்வரும் லோக்சபா பொது தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் படி, மாவட்டத்தில் உள்ள, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளில் இருந்தே ஓட்டளிக்க ஏதுவாக, 12டி படிவங்கள் வீடு வீடாக நேரில் வினியோகிக்கப்பட்டது.
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர், மேட்டுப்பாளையம், அவிநாசி, ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில், 13 ஆயிரத்து, 73 வாக்காளர்கள், 85 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 10 ஆயிரத்து, 77 வாக்காளர்கள் மாற்றுத்திறனாளிகளாகவும் உள்ளனர்.
இவர்கள் வரும் லோக்சபா தேர்தலில், சிரமம் இன்றி தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற, வீடுகளுக்கு சென்று, 12டி படிவம் தேர்தல் அலுவலர்கள் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனை 25ம் தேதிக்குள் பூர்த்தி செய்து வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

