/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கை விவசாயிகளுக்கு மண் வள அட்டை வினியோகம்
/
இயற்கை விவசாயிகளுக்கு மண் வள அட்டை வினியோகம்
ADDED : ஆக 06, 2024 05:58 AM
கோவில்பாளையம்: இயற்கை விவசாயிகளுக்கு, ஒருநாள் பயிற்சி வகுப்பு காளப்பட்டியில் நடந்தது.
சர்க்கார் சாமக்குளம் வட்டாரம், காளப்பட்டியில், வேளாண்துறையின் 'அட்மா' திட்டத்தின் கீழ், இயற்கை இடுபொருள் தயாரிப்பது குறித்த தொழில்நுட்பங்களை தெரிவிக்கும் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.
வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) புனிதா பேசுகையில், முதல்வரின் 'மண்ணுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், ரசாயன உர பயன்பாட்டை குறைத்தல், மண்வள அட்டை வழங்குதல், சிறுதானிய பயிர் வகைகள் மற்றும் பாரம்பரிய ரகங்களை பாதுகாத்தல், மானாவாரி சாகுபடிக்கு மானியம் வழங்குதல் ஆகிய திட்டங்கள் இந்த ஆண்டு செயல்படுத்தப்படுகிறது, என்றார்.
சூலூர் இயற்கை முன்னோடி விவசாயி செந்தில்குமார், இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளான, பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி, பண்ணை கழிவில் உரம் தயாரித்தல் ஆகிய தொழில்நுட்பங்களை விளக்கினார்.
தேசிய உணவு பாதுகாப்பு இயக்க மாவட்ட ஆலோசகர் மாரியப்பன், உதவி வேளாண் அலுவலர் லட்சுமண பாபு, துணை வேளாண் அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இயற்கை விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டது.