/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடமூலா பழங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
/
கோடமூலா பழங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கோடமூலா பழங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கோடமூலா பழங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 23, 2024 02:41 AM
கூடலுார்;கூடலுார் கோடமூலா பழங்குடி கிராமத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.
அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்; 'தாட்கோ' மூலம் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் பணிகள்; பழங்குடியினருக்கு கட்டப்படும் ஆறு வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அல்லுார் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் எடை மற்றும் உயரம், அத்தியாவசிய பொருள்களின் இருப்பு; தொரப்பள்ளி துணை சுகாதார நிலையம், ரேஷன் கடை, மழை வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட இருவயல் கிராமங்களில் ஆய்வு செய்தார்.
ஸ்ரீமதுரை போஸ்பாரா முதல் செம்பக்கொல்லி பழங்குடியினர் கிராம் வரை, சாலை அமைப்பது தொடர்பாக, திட்ட அறிக்கை தயார் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பொதுமக்களிடம், மனுக்கள் பெற்று கொண்டனர். பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கூட்டத்தில், எஸ்.பி., நிஷா, கூடுதல் கலெக்டர் கவுசிக் உட்பட பலர் பங்கேற்றனர்.