/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
/
குன்னுாரில் தி.மு.க., வேட்பாளர் பிரசாரம்
ADDED : ஏப் 03, 2024 10:19 PM
குன்னுார் : குன்னுார் அருகே கேத்தி பாலாடா, அருவங்காடு, பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, பெட்டட்டி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட தி.மு.க வேட்பாளர் ராஜா பேசியதாவது : இது, நீலகிரிக்கு தமிழகத்திற்கும் நடக்கும் தேர்தல் அல்ல. இந்தியாவையும், அரசியலமைப்பு சட்டத்தையும் காப்பாற்றக்கூடிய தேர்தலாகும்.
அனைத்து ஜாதி மத மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு கொடுக்கப்பட்டது. முதலாளி துவத்தை முன்னிறுத்தி ஜாதி மதத்தின் பெயரால் நாட்டை துண்டாட நினைத்தால் நாடு தாங்காது. '25 கோடி பேரை வறுமை கோட்டிற்கு மேல் கொண்டு வந்து விட்டோம்,' என, கூறுகின்றனர். வங்கி கணக்கு துவக்கி அதில் பணத்தை போடுவதாக கூறி போடாமல், அந்த கணக்கை வைத்து வறுமை கோட்டிற்கு மேல் வந்துவிட்டதாக பொய் கூறுகின்றனர். தமிழக மகளிரின் நலனுக்காக மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வருகின்ற தேர்தலில் மலை மாவட்ட வாக்காளர்கள் என்னை வெற்றி பெற செய்து பார்லிமென்ட்க்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் முபாரக், காங்., கம்யூ., விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பேசினர்.

