/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தி.மு.க., வேட்பாளர் இறுதி கட்ட பிரசாரம்
/
தி.மு.க., வேட்பாளர் இறுதி கட்ட பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 11:46 PM

கூடலுார்:நீலகிரி தி.மு.க., வேட்பாளர் ராஜா கூடலுார் தொகுதிக்கு உட்பட்ட ஓவேலி சூண்டி, கூடலுார் பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது ராஜா பேசியதாவது:
கூடலுார் ஓவேலி பகுதியில், 45 கோடி ரூபாய் வளர்ச்சி பணிகள் செய்துள்ளோம். செக்ஷன்-17 நிலப் பிரச்னைக்கு சட்டப்படியான தீர்வு காண உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளோர். தேர்தலுக்கு முன் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்தோம்.
பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி இல்லாததால் வழக்கு தள்ளி போய் உள்ளது. தேர்தலுக்கு பின் இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். தமிழகத்தின் மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நேரில் வரவில்லை. தமிழக அரசு கேட்ட நிதியும் வழங்கவில்லை. ஆனால், தேர்தலின் போது அவர் பலமுறை தமிழகத்திற்கு வந்து சென்றார். மத்திய அரசின் விசாரணை துறைகள் மூலம் எதிர் கட்சி தலைவர்கள், முதல்வர்களை மிரட்டி வருகிறார். மிரட்டலுக்கு அச்சப்படாத மனிதராக தமிழக முதல்வர், ஸ்டாலின் உள்ளார்.
மத்தியில் நமக்கான ஆட்சி அமைக்கின்ற பொழுது தமிழகம் மேலும் உயரும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தி.மு.க., மாவட்ட செயலாளர் முபாரக், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

