/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் தி.மு.க., பொது குழு: அமைச்சர் பங்கேற்பு
/
ஊட்டியில் தி.மு.க., பொது குழு: அமைச்சர் பங்கேற்பு
ADDED : மார் 05, 2025 10:16 PM
ஊட்டி; ஊட்டியில், தி.மு.க., மாவட்ட பொது குழு கூட்டம் நடந்தது.
அதில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''தமிழக மக்களுக்கு மாநில முதல்வர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தாய் மொழியை காக்கவும், அவரை மீண்டும் முதல்வராக்கவும், 2026 சட்டசபை தேர்தல் தான் நம் இலக்காக உள்ளது.
அதில், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற பணியாற்ற வேண்டும். நீலகிரியில் மூன்று தொகுதிகளில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற ஒவ்வொரு தொண்டனும் பாடுபட வேண்டும்,'' என்றார்.
நீலகிரி எம்.பி.ராஜா பேசுகையில், ''மாநில முதல்வர் ஸ்டாலின் ஏப்., முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ஊட்டிக்கு வருகிறார். அதற்குள், கூடலுார் நில பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி முதற்கட்டமாக, 1,000 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி, பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்களை அறிவிக்க உள்ளார். அதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது,'' என்றார்.