/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தி.மு.க., ஆவேசம்... காங்., தர்ணா... அ.தி.மு.க., புறக்கணிப்பு! ஊட்டி நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
/
தி.மு.க., ஆவேசம்... காங்., தர்ணா... அ.தி.மு.க., புறக்கணிப்பு! ஊட்டி நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
தி.மு.க., ஆவேசம்... காங்., தர்ணா... அ.தி.மு.க., புறக்கணிப்பு! ஊட்டி நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
தி.மு.க., ஆவேசம்... காங்., தர்ணா... அ.தி.மு.க., புறக்கணிப்பு! ஊட்டி நகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
ADDED : ஆக 29, 2024 10:05 PM

ஊட்டி : ஊட்டி நகராட்சியில் நேற்று நடந்த மன்ற கூட்டத்தில் ஏற்பட்ட காரசார விவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி நகராட்சி சாதாரண கூட்டம் நகர் மன்ற அலுவலகத்தில் நடந்தது. தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, நகர் மன்ற துணைத்தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி கூட்டத்தில் வார்டு பிரச்னைகளை முன் வைத்து தி.மு.க., - காங்., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது:
சமீபத்தில் பெய்த கன மழைக்கு வார்டுகளில் உள்ள சாலைகள் சீரமைக்கப்படாததால் சேறும், சகதியுமாக மாறி மக்கள் பாதிக்கப்பட்டனர். சாலை சீரமைப்புக்கு ஒவ்வொரு நகராட்சி கூட்டத்திலும் வலியுறுத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
கழிப்பறைகள் பயன்படுத்த முடியாமல் அவல நிலையில் உள்ளது. சுற்றுலா நகரில் சுகாதாரம் கேள்வி குறியாகியுள்ளது.
'ஸ்வச் பாரத்' திட்டத்தில் நவீன கழிப்பறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சில வார்டுகளில் விதிமீறி தனியார் இடத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஊட்டி - கோத்தகிரி பிரதான சாலையில் கழிவுநீர் பல நாட்களாக வழிந்தோடுகிறது. ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் வீடுகளை காட்டேஜ்களாக மாற்றி விதி மீறும் செயல் அதிகரித்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பொது நிதி மூலம் குடிநீர் உள்ளிட்ட அவசர தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதம்
வார்டு வளர்ச்சி பணிகளில் பாரபட்சம் காட்டுவதாக தி.மு.க., பெண் கவுன்சிலர் கீதா, கமிஷனரிடம் முறையிட்டார். திடீரென கீதாவுக்கும் - தி.மு.க., கவுன்சிலர் ரவிக்கும் இடையே வளர்ச்சி பணி குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் ஒன்று சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதத்திற்கு இடையே கவுன்சிலர் ஜார்ஜூக்கும், துணைத்தலைவர் ரவிக்குமாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூட்ட அரங்கம் களேபரமானது. 'காங்., கவுன்சிலர் நாதன் வளர்ச்சி பணி நிறைவேற்றவில்லை,' என கூறி , திடீரென கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க., புறக்கணிப்பு
இந்நிலையில், 'பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் ஆன நிலையில், அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் பாரபட்சம் காட்டுகிறது,' என கூறி, அ.தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி, தனப்பிரியா, சுருதி கிருஷ்ணன், சகுந்தலா, அக்கீம் பாபு, அன்பு செல்வன், குமார் ஆகிய, 7 கவுன்சிலர்கள் மன்ற கூட்டத்தை புறக்கணித்து நகராட்சி நுழைவு வாயிலில் மாதிரி கூட்டம் நடத்தி சென்றனர்.
நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா பேசுகையில், 'நிதி நிலையை கருத்தில் கொண்டு அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. அவசர தேவைக்கு பொது நிதி மூலம் பணிகள் நடந்து வருகிறது. எந்த வார்டும் புறக்கணிக்கப்படவில்லை. படிப்படியாக வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்,' என்றார்.