/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தினம்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தினம்
ADDED : ஜூலை 02, 2024 02:33 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளிலிருந்து, தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வெளி நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
காலை ஏழு மணிக்கு துவங்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை பணியானது, மதியம், 12:00 மணி வரை நடைபெறுகிறது.
நேற்று மதியம், 12:00 மணிக்கு மேல், மருத்துவமனை அலுவலகத்தில், டாக்டர்கள் தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திக் மகாராஜன் தலைமை வகித்தார். டாக்டர் சுபாஷினி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.
மருத்துவமனைக்கு இடம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்த பழனிசாமி, டாக்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் கார்த்திகேயன், சசிகுமார், மனோகரன் உட்பட செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
குமரன் தங்க மாளிகை அலுவலர்கள், டாக்டர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.