/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் நாளை நாய் கண்காட்சி துவக்கம்
/
ஊட்டியில் நாளை நாய் கண்காட்சி துவக்கம்
ADDED : மே 09, 2024 05:05 AM
ஊட்டி : ஊட்டியில், தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில், அரசு கலை கல்லுாரி மைதானத்தில், நாளை நாய் கண்காட்சி துவங்குகிறது. இந்த கண்காட்சியில், 52 ரகங்களில், 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன.
இது குறித்து, தென்னிந்திய கெனல் கிளப் தலைவர் ரஜினி கிருஷ்ணமூர்த்தி நிருபர்களின் கூறியதாவது:
சவுத் இந்தியன் கெனல் கிளப் சார்பில், 134 மற்றும் 135 வது கண்காட்சி ஊட்டி அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில், 10ம் தேதி தொடங்கி, 12 ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கும். முதல் நாளில், நாய்களின் கீழ் படிதல் போட்டியுடன் கண்காட்சி நடத்தப்படும். இந்த போட்டிகளை சிங்கப்பூரை சேர்ந்த நடுவர் 'பேட்ரிக் வாங்' நாய்களை மதிப்பிடுவார்.மேலும், டாஸ்ஹவுண்ட், கோல்டன் ரீட்டிவர், கிரே டேன் ரக நாய்களின் சிறப்பு கண்காட்சி நடத்தப்படும்.
இந்தாண்டு நாடு முழுவதில் இருந்து, 52 வகையில், 450க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்கின்றன. இதில், நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய ரகங்கள் பங்கேற்கின்றன. போட்டியின் நடுவர்களாக பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மாரியோ மகசாசே, தாய்வானை சேர்ந்த அலெக்ஸி, சிங்கப்பூரை சேர்ந்த சின் மின் காக் பணியாற்றுகின்றனர்.
கண்காட்சியின் இறுதி நாளில், போட்டியில் பங்கேற்ற நாய்களில் ஒன்றிற்கு 'ஆண்டின் சிறந்த நாய்' விருதும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்பாடுகளை செயலாளர் மோத்தீஸ் உட்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.