/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒவ்வொருவரும் கண் தானம் செய்யுங்கள்: விழிப்புணர்வு ஊர்வலத்தில் அறிவுரை
/
ஒவ்வொருவரும் கண் தானம் செய்யுங்கள்: விழிப்புணர்வு ஊர்வலத்தில் அறிவுரை
ஒவ்வொருவரும் கண் தானம் செய்யுங்கள்: விழிப்புணர்வு ஊர்வலத்தில் அறிவுரை
ஒவ்வொருவரும் கண் தானம் செய்யுங்கள்: விழிப்புணர்வு ஊர்வலத்தில் அறிவுரை
ADDED : ஆக 28, 2024 02:14 AM

குன்னுார்;''ஒவ்வொருவரும் கண்தானம் செய்ய உறுதிமொழி அளித்து, மாநிலத்தில், 100 சதவீத கண்தானம் வழங்கும் மாவட்டமாக நீலகிரியை மாற்ற இயலும்,'' என, விழிப்புணர்வு ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆண்டுதோறும், ஆக., 25ம் தேதியிலிருந்து செப்., 8ம் தேதி வரை தேசிய கண்தான விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், தேசிய கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் குன்னுாரில் நடந்தது.
பெட்போர்டு பகுதியில் துவங்கிய ஊர்வலம், மவுண்ட் ரோடு, பஸ் ஸ்டாண்ட் வழியாக தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிறைவு பெற்றது.
அப்பர் குன்னுார் இன்ஸ்பெக்டர் ரவி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கோவை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் ஜெயஸ்ரீ அருணாபிரகாஷ்,
பேசுகையில், ''தொலைநோக்கு பார்வையில் வளர்ந்து வரும் இந்தியா போன்று வளரும் நாடுகளில், மக்களின் பார்வை திறன் என்பது முக்கியமானது. கண் தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொருவரும் கண்தானம் செய்ய உறுதிமொழி அளித்து, மாநிலத்தில், 100 சதவீத கண்தானம் வழங்கும் மாவட்டமாக நீலகிரியை மாற்ற இயலும்,'' என்றார்.
கோவை டாக்டர் மம்தா, குன்னுார் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள், பிராவிடன்ஸ் கல்லுாரி பேராசிரியைகள், மாணவியர் பங்கேற்றனர்.