/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோல்வியால் மனம் தளர கூடாது ;மன நல ஆலோசகர் அறிவுரை
/
தோல்வியால் மனம் தளர கூடாது ;மன நல ஆலோசகர் அறிவுரை
ADDED : மே 06, 2024 10:55 PM

பந்தலுார்:'தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலோ, தோல்வியை தழுவினாலோ மனம் தளரக்கூடாது,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சத்தியசீலன், மனநல ஆலோசகர், பந்தலுார்: தேர்வு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் சூழலை, மேம்படுத்தி கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகும். மாறாக தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலோ அல்லது தோல்வியை தழுவினாலோ மனம் தளர கூடாது. மீண்டும் தேர்வு எழுத தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.
மனதில் ஏதேனும் பயம் அல்லது தாழ்வு மனப்பான்மை எழுந்தால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் கூறி தயங்காமல் ஆலோனை பெற வேண்டும். தோல்வி அடைந்த பலர், சாதனையாளர்களாக மாற்றி உள்ளதை நினைவில் கொள் வேண்டும்.
கிருஷ்ணகுமார், உதவி தலைமை ஆசிரியர், தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி: மதிப்பெண்கள் ஒருபோதும் உங்கள் மதிப்பை உயர்த்தாது. தோல்வியால் ஏற்பட்ட உன் காயத்தை, கவலையை போக்க உடனடியாக உடனடி தேர்வு இருக்கிறது. அதனை எழுதி, கூடுதல் மதிப்பெண்கள் பெற்று சாதிக்க முடியும். மேலும், குறைவான மதிப்பெண் பெற்றுவிட்டோம் என துவண்டு விடக்கூடாது. அதன்பின் சாதிக்க ஆயிரம் வாசல்கள் திறந்து இருக்கின்றன. பெற்றோரும், ஆசிரியர்களும் இவர்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்க வேண்டும்.
விவேக், மன நல மருத்துவர், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை: தேர்வில் தோல்வியடைந்து விட்டோம் என்ற மன கவலை இருக்க கூடாது. அச்சப்படவும் தேவையில்லை. மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றார் போல் தன்னை தயார் செய்து, வெற்றி பெறுவதற்கான வழிகளை பார்க்க வேண்டும். மன நல சம்பந்தமான 'கவுன்சிலிங்' தேவைப்பட்டால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையை அணுகலாம்.