/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடைகளை அடைக்க வேண்டாம்; வணிகர் சங்கத்திற்கு வேண்டுகோள்
/
கடைகளை அடைக்க வேண்டாம்; வணிகர் சங்கத்திற்கு வேண்டுகோள்
கடைகளை அடைக்க வேண்டாம்; வணிகர் சங்கத்திற்கு வேண்டுகோள்
கடைகளை அடைக்க வேண்டாம்; வணிகர் சங்கத்திற்கு வேண்டுகோள்
ADDED : மே 01, 2024 10:55 PM
குன்னுார் : நீலகிரி மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை :
'வரும், 5ம் தேதி வணிகர் தினத்தை ஒட்டி வணிகர் சங்க மாநாடு நடக்க உள்ளதால், அனைத்து கடைகளும் அடைக்கப்படும்,' என, வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக எஸ்டேட் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பசுந்தேயிலைக்கு சனிக்கிழமையில் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்கள் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க மார்க்கெட் வந்து செல்கின்றனர்.
அன்றைய தினம் கடை வீதிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்று, மாற்று நாட்களில் மார்க்கெட் வந்தால் சம்பளம் இழப்பு ஏற்படும்.
எனவே, 5ம் தேதி கடைகள் அடைப்பதை தவிர்த்து மக்களின் நலனுக்காக கடைகளை திறக்க வேண்டும். குன்னுாரில் உள்ள தோட்ட தொழிலாளர் அதிகாரிகள் வணிகர் சங்கத்திடம் இது குறித்து வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு சிவ சுப்ரமணியம் கூறியுள்ளார்.

