/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ்சில் மின்கம்பி உரசி டிரைவர் பலி: கோத்தகிரி அருகே சோகம்
/
அரசு பஸ்சில் மின்கம்பி உரசி டிரைவர் பலி: கோத்தகிரி அருகே சோகம்
அரசு பஸ்சில் மின்கம்பி உரசி டிரைவர் பலி: கோத்தகிரி அருகே சோகம்
அரசு பஸ்சில் மின்கம்பி உரசி டிரைவர் பலி: கோத்தகிரி அருகே சோகம்
ADDED : ஆக 17, 2024 01:07 AM

கோத்தகிரி;கோத்தகிரி அருகே, மின் கம்பி அரசு பஸ்சில் உரசி, டிரைவர் பலியான சம்பவம்,சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரசு போக்குவரத்து கிளையில், தேனாடு கிராமத்தை சேர்ந்த பிரதாப்,43, டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று காலை, பயணிகளை ஏற்றிக்கொண்டு, கூட்டாடா பஸ்சில் கோத்தகிரிக்கு சென்று கொண்டிருந்த போது, மின்கம்பி பஸ்சில் உரசி உள்ளது.
சப்தம் கேட்ட டிரைவர் பஸ்சை நிறுத்தி இறங்கி பார்த்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின் கம்பி பட்டு, மின்சாரம் அவர் மீது பாய்ந்ததில் அவர் கீழே விழுந்தார்.
பஸ்சில் பயணித்த பயணிகள் மற்றும் நடத்துனர் ஆம்புலன்சில் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், பரிதாபமாக இறந்தார்.அவருக்கு, மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.