ADDED : ஜூன் 26, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது.
ஊட்டி எச்.ஏ.டி.பி., மைதானத்தில், கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
அதில், ‘போதை பொருட்களின் தீமைகள், போதை பொருட்களின் பயன்பாட்டால், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு நிகழும் ஆபத்து, சமுதாய சீர்கேடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒட்டத்தில், 14 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், அலுவலர்கள், என்.சி.சி., மற்றும் என்.எஸ் எஸ்., தொண்டர்கள் பங்கேற்று, 6. கி.மீ., தூரம் ஒடினர். தொடர்ந்து, போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழியுடன், கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார். நீலகிரி எஸ்.பி., பிருந்தா உட்பட பலர் பங்கேற்றனர்.
