/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிற்பயிற்சி மையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
தொழிற்பயிற்சி மையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொழிற்பயிற்சி மையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொழிற்பயிற்சி மையத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : மார் 28, 2024 11:47 PM
பந்தலுார்:பந்தலுார் அருகே உப்பட்டி ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பயிற்சி மையத்தில், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், 'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பு இணைந்து போதை பொருள் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
முதல்வர் வெங்கடகிருஷ்ணன் தலைமை வகித்தார். உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சோமேஷ், நெல்லியாளம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் (பொ) மலர்கொடி, துாய்மை பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர்.
தொடர்ந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''போதை பொருள் பயன்பாடு என்பது மனிதனை, தவறான பாதையில் அழைத்துச் செல்லும் ஒருவித தீவிரவாத செயல் போல உள்ளது.
இளைய தலைமுறை தொடர்ந்து போதை பொருள் பயன்படுத்துவதால் உடல் செயல் திறன் குறைந்து வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் வரும் தலைமுறை அழிவின் பிடியிலும் சிக்கும்,''என்றார்.
மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வகுமாரி பேசுகையில், ''போதை பயன்பாடுகளால் சமூகத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து, இளைய தலைமுறையின் வாழ்வு சீரழிகிறது,'' என்றார்.
டாக்டர் மனோஜ் பேசினார். 'ஏகாம் பவுண்டேஷன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், தொழிற்பயிற்சி மைய மாணவர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். அஜித் நன்றி கூறினார்.

