/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் ஊட்டி அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் திறப்பு அதிநவீன வசதிகளுடன் சிகிச்சை

ADDED : பிப் 27, 2025 09:54 PM

ஊட்டி,; ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அதிநவீன வசதிகளுடன் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில், 14.6 சதவீதம் பேர் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. தவிர கஞ்சாவிற்கு, 1.8 சதவீதம் பேர்; ஹெராயின், ஒபியம் உள்ளிட்ட போதை பொருள்களுக்கு, 4.5 சதவீதம் பேர் அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், 10 பேரில் 4 பேருக்கு மது பழக்கம் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 'இந்த எண்ணிக்கை அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடும்,' என, கூறப்படுகிறது. தவிர , பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுவது வேதனை அளிக்கிறது.
போதை மறுவாழ்வு மையம்
இந்நிலையில், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அமைக்கப்பட்ட போதை மறுவாழ்வு மையத்தை அரசு கொறடா ராமச்சந்திரன் பங்கேற்று திறந்து வைத்தார். இந்த மையத்தில் போதை பொருட்களாகிய மதுபானம், புகையிலை, கஞ்சா போன்ற எந்த போதை பழக்கத்திற்கும் அடிமையானவர்கள் இங்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். நவீன வசதிகளுடன் துவங்கிய இந்த மையத்தில்,24 மணி நேரமும் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் குழு சிகிச்சை மனநல ஆலோசகர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர் சிகிச்சை வசதிகள் அளிக்க சமூக பணியாளர் பணியில் உள்ளனர்.
அரசு கொறடா ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்,''போதை மறுவாழ்வு மையத்தில் விலை உயர்ந்த மருந்துகளும் அதிநவீன சிகிச்சை முறைகளும் இந்த சிகிச்சை மையத்தில் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார். மருத்துவ கல்லுாரி முதல்வர் கீதாஞ்சலி, இருப்பிட மருத்துவர் ரவிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.