/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை இல்லாததால் மலை காய்கறி விவசாயிகள் கவலை கார்போகத்தில் சுணக்கம்!நிலங்கள் தயார்படுத்தியும் விதைப்பு பணி செய்ய அச்சம்
/
மழை இல்லாததால் மலை காய்கறி விவசாயிகள் கவலை கார்போகத்தில் சுணக்கம்!நிலங்கள் தயார்படுத்தியும் விதைப்பு பணி செய்ய அச்சம்
மழை இல்லாததால் மலை காய்கறி விவசாயிகள் கவலை கார்போகத்தில் சுணக்கம்!நிலங்கள் தயார்படுத்தியும் விதைப்பு பணி செய்ய அச்சம்
மழை இல்லாததால் மலை காய்கறி விவசாயிகள் கவலை கார்போகத்தில் சுணக்கம்!நிலங்கள் தயார்படுத்தியும் விதைப்பு பணி செய்ய அச்சம்
ADDED : ஏப் 02, 2024 10:38 PM

ஊட்டி:நீலகிரியில் கோடை மழை இல்லாததால் கார்போக விவசாயத்தில் சுணக்கம்
ஏற்பட்டுள்ளது; நிலங்களை தயார்படுத்திய விவசாயிகள் விதைப்பு பணிகளை
மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கலப்பு விவசாயம் மேற்கொள்ளப்படும் பகுதியாகும். இங்குள்ள சீதோஷ்ண நிலை அண்டை மாவட்டங்களை காட்டிலும் பெருமளவு வேறுப்பட்டது.
ஆண்டு சராசரி மழை அளவு, 152 செ.மீ., ஆகும். இங்கு நிலவும் தட்ப வெப்பநிலை பல்வேறு பயிர்கள் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.
சாகுபடி செய்யும் முறைகள்:
இங்கு, காய்கறி, பழம், வாசனைதிரவிய பயிர், மலர், மருத்துவ பயிர் மற்றும் மலைத் தோட்டப்பயிர்கள் ஆகியவை படிமட்டங்களிலும், சில கிராமங்களில் குறுகிய சரிவான பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன.
மலையின் உயரமான பரப்பில் உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், கேரட், பீன்ஸ், பிளம், பீச், பேரி மற்றும் இதர வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. மலையின் இடைப்பட்ட பகுதிகளில், கமலா ஆரஞ்சு, காபி சாகுபடி செய்யப்படுகிறது.
குறைந்த உயரப்பகுதிகளில் கிராம்பு, ஜாதிக்காய், மிளகு, இஞ்சி மற்றும் துரியன், லிச்சி, ரம்பூட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
கார்போக விவசாயம்:
தோட்டக்கலை பயிரான மலை காய்கறி, ஆண்டிற்கு, 'நீர் போகம்; கார் போகம்; கடை போகம்,' என, மூன்று பருவங்களாக சாகுபடி செய்யப்படுகிறது.
மாவட்ட முழுவதும், 80 ஆயிரம் விவசாயிகள் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்தாண்டு மழை பொய்த்ததால் மலை காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டது.
நடப்பாண்டில், ஜன., மாதம் பயிரிடப்பட்ட கேரட், வெள்ளை பூண்டு, பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட மலை காய்கறிகள் அறுவடைக்கு தயாராகியுள்ளது.
மெயின் சீசன் காலங்களான ஏப்., மாதம் முதல், ஜூலை மாதம் வரை 'கார்போகம்' விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த கார்போகம் விவசாயத்தில் தான் அதிகளவில் மலை காய்கறி விவசாயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதில், ஊட்டி அருகே எம்.பாலாடா, நஞ்சநாடு, கல்லக்கொரை ஹாடா, மணலாடா, தேனாடு கம்பை, கடநாடு, கொல்லிமலை ஓரநள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார மலை காய்கறி தோட்டங்களில் விதைப்பு பணி மேற்கொள்ள தோட்டங்கள் தயாராக உள்ளன.
மழை பொய்த்து வருவதால் விதைப்பு பணி மேற்கொள்ள, விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். விதைப்பு பணி மேற்கொண்ட விவசாயிகள் தோட்டங்களில் ஆங்காங்கே சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை ' ஸ்பிரிங்ளர்' உதவியுடன் பாய்ச்சி வருகிறது. எனினும், கோடை மழை குறித்த பருவத்தில் வராததால், கார்போகப்பணிகள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

