/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பலத்த காற்றுக்கு அடுத்தடுத்து மரங்கள் விழுந்து பாதிப்பு
/
பலத்த காற்றுக்கு அடுத்தடுத்து மரங்கள் விழுந்து பாதிப்பு
பலத்த காற்றுக்கு அடுத்தடுத்து மரங்கள் விழுந்து பாதிப்பு
பலத்த காற்றுக்கு அடுத்தடுத்து மரங்கள் விழுந்து பாதிப்பு
ADDED : ஜூன் 26, 2024 09:18 PM

ஊட்டி : நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கி, கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, தேவாலா, 18 செ.மீ., கூடலூர், 14 செ.மீ., பந்தலூர், 13 செ.மீ., அப்பர்பவானி, 10 செ.மீ., மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன மழை பெய்தது. பலத்த காற்றுக்கு ஊட்டி, மஞ்சூர், இத்தலார், எமரால்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது.
பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு கிண்ணக்கொரை - மஞ்சூர் சாலை, ஊட்டி அருகே கல்லக் கொரை சாலை, தாவரவியல் பூங்காவிலிருந்து ராஜ்பவன் மாளிகை செல்லும் சாலைகளில் ராட்சத மரம் விழுந்தது. கல்லக்கொரை மற்றும் மஞ்சூரில் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் ஹரிராம கிருஷ்ணன் உத்தரவின் பேரில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று 'பவர்ஷா' உதவியுடன் மரத்தை அறுத்து அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.
மஞ்சூர் சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலை. துறையினர் அகற்றினர். மழைக்கு சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. காற்று, மழைக்கு குளிரான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தாவரவியல், பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தாசில்தார் சரவணன் கூறுகையில்,''மழைக்கு பாதிப்பு ஏதும் இல்லை. மழை தொடரும் பட்சத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் பாதிப்பு இருந்தால் வருவாய்துறையை தொடர்பு கொண்டு நிவாரண முகாம்களில் தங்கலாம்,'' என்றார்.