/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாலுகா அலுவலக சாலை சீரமைக்காததால் புழுதி
/
தாலுகா அலுவலக சாலை சீரமைக்காததால் புழுதி
ADDED : பிப் 27, 2025 03:20 AM

கோத்தகிரி: கோத்தகிரி தாலுகா அலுவலக சாலையை சீரமைக்காததால், வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி நகரில் ஜல்ஜீவன் திட்டத்தில், அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்க ஏதுவாக, தாலுகா அலுவலக சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழாய் பதிக்க குழிகள் வெட்டப்பட்டன.
குழாய்கள் பதித்து பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
எதிரில் வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும், புழுதியால் மாசு அதிகரித்துள்ளது.
இப்பகுதியில், அரசு பள்ளி, அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானம் மற்றும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளதால், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம். சாலை குழிகளை சரிவர மூடுவதுடன், தார் போட்டு விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.