/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை வெள்ளம் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க துார் வார வேண்டும்
/
மழை வெள்ளம் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க துார் வார வேண்டும்
மழை வெள்ளம் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க துார் வார வேண்டும்
மழை வெள்ளம் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க துார் வார வேண்டும்
ADDED : ஜூலை 15, 2024 02:41 PM

கூடலுார்: கூடலுார் கோழிகொல்லி பழங்குடியினர் கிராமத்திற்குள் மழை வெள்ளம் சூழ்ந்து ஏற்படும் பாதிப்பை தடுக்க, அவ்வழியாக செல்லும் ஆற்றை துார் வார வேண்டும்.
கூடலுார் பகுதியில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடிக்கடி பலத்த மழை பெய்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய தோட்டங்கள் குடியிருப்பை சூழ்ந்து வருவதால் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
கூடலுார், புளியம்பாறை பகுதியில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது, கோழிக்கொல்லி பழங்குடியினர் கிராமம் வழியாக செல்லும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாய தோட்டங்கள் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது.
மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து, பருவமழை பெய்து வருவதால் மீண்டும் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, குடியிருப்புக்குள் சூழும் ஆபத்து உள்ளது. மக்கள் கூறுகையில், 'குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்வதை தடுக்க ஆற்றை துார்வாரி சீரமைக்க வேண்டும்,' என்றார்.