/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லையில் இ-பாஸ் பரிசோதனை பணி பயணிகளின் நிழலுக்காக ஓலை பந்தல்
/
எல்லையில் இ-பாஸ் பரிசோதனை பணி பயணிகளின் நிழலுக்காக ஓலை பந்தல்
எல்லையில் இ-பாஸ் பரிசோதனை பணி பயணிகளின் நிழலுக்காக ஓலை பந்தல்
எல்லையில் இ-பாஸ் பரிசோதனை பணி பயணிகளின் நிழலுக்காக ஓலை பந்தல்
ADDED : மே 09, 2024 05:09 AM

குன்னுார் கல்லாறு பகுதியில் கடும் வெயில் நிலவி வரும் நிலையில், இ-பாஸ் சோதனைக்காக காத்திருக்கும் பயணிகளின் நிழலுக்காக ஓலை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா ஸ்தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு இ--பாஸ் நடைமுறைபடுத்த, ஐகோர்ட் உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நீலகிரிக்கு வரும் வாகனங்கள் கல்லாறு, குஞ்சப்பனை, கக்கனல்லா, உள்ளிட்ட சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு, பரிசோதனை பணி முடிந்தவுடன், இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல, சமவெளி பகுதிகளில் 'ரெட் டாக்சி 'உள்ளிட்ட வாடகை வாகனங்களை எடுத்து வரும் நீலகிரி மக்களும் இ-பாஸ் பெற்று வருகின்றனர். வெளியூர் பதிவெண் கொண்ட உள்ளூர் வாகனங்களில் வருபவர்களும் பலரும், எல்லை பிரச்னைகளை தவிர்க்க இ-பாஸ் பதிவிட்டு வருகின்றனர். அதில், பல சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறாமல் வந்தபோதும், சோதனை சாவடிகளில் உள்ள சில ஊழியர்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்தபின் அனுமதி வழங்கப்படுகிறது.
கல்லாறு சோதனை சாவியில், 20க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர் உட்பட அரசு துறை ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு. பதிவுகளை சரி பார்த்து அனுமதிக்கின்றனர். கடும் வெயில் நிலவி வரும் நிலையில், இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் உட்பட பிற பயணிகளின் நிழலுக்காக ஓலை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.