/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இ-பாஸ் நடைமுறை சுற்றுலா :பயணிகள் கருத்து
/
இ-பாஸ் நடைமுறை சுற்றுலா :பயணிகள் கருத்து
ADDED : மே 10, 2024 11:46 PM

ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 126 வது மலர் கண்காட்சி நேற்று துவங்கியது. கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் சிலர், 'இ-பாஸ்' குறித்து கூறிய கருத்து:
முருகன், சென்னை: ஊட்டிக்கு சுற்றுலா வரும் வாகனங்கள், இ-பாஸ் மூலம் வர வேண்டும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். நான் அதற்கான இணையதளம் மூலம் பதிவு செய்த போது, உடனே அனுமதி கிடைத்து விட்டது. இந்த நடைமுறை தொடர வேண்டும்.
லேகா, சென்னை: மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் மூலம், ஊட்டி வந்தேன். நீலகிரியின் பசுமையை பாதுகாக்கும் வகையில், வாகனங்களின் எண்ணிக்கையை அறிய இ--பாஸ் நடைமுறை அற்புதமானது. நகரில் எவ்வித போக்குவரத்து நெரிசல் இன்றி சுற்றுலா பயணிகள் சென்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இ--பாஸ் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை. எளிமையாக பதிவு செய்து வரலாம்.
மஞ்சுளா, சென்னை: ஊட்டிக்கு கடந்த முறை மலர் கண்காட்சிக்கு வந்த போது கடும் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டோம். இதற்கு தீர்வு கிடைக்குமா என்று நினைத்திருந்தோம். கோர்ட் உத்தரவுப்படி இ--பாஸ் நடைமுறை வரவேற்கத்தக்கது. எளிமையாக இ-பாஸ் பதிவு செய்து தான் வாகனத்தில் வந்தோம். தங்கும் விடுதிகளில் கட்டண உயர்வு மற்றும் தரமான உணவு குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.