தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மாணவர்களுக்கான அறிவுதிறன் வளர்க்கும் கல்வி வேண்டும்

மாணவர்களுக்கான அறிவுதிறன் வளர்க்கும் கல்வி வேண்டும்

மாணவர்களுக்கான அறிவுதிறன் வளர்க்கும் கல்வி வேண்டும்


ADDED : ஜூலை 17, 2024 08:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2024 08:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி : கோத்தகிரி கூக்கல்தொறை அரசு உயர்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி, கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ஆனந்த் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

காமராஜர், தனது வாழ்வின் கடைசி நாள் வரை, ஐந்து கதர் சட்டைகளைத் தவிர, வேறு சொத்து இல்லாமல் எளிமைக்கு உதாரணமாக வாழ்ந்தார்.

அவருடைய காலத்தில் தான் விவசாய வளர்ச்சிக்காக தமிழ்நாட்டில், 40 அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. கல்விக் கண்ணை திறந்த காமராஜர் முதலமைச்சராக இருந்த ேபாது, 40 ஆயிரம் கிராமங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

மாநில கல்வி வளர்ச்சி


மதிய உணவு வழங்கி, மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்த ெபருமை அவருக்கு உள்ளது. 5 கி.மீ., தொலைவில் ஒரு நடுநிலைப்பள்ளி, 10 கி.மீ., தொலைவில் ஒரு உயர்நிலைப் பள்ளியும் ஏற்படுத்தி, மாநில கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டவர் காமராஜர்.

ஆனால், காலமாற்றத்தின் காரணமாக, கல்வி என்பது நமது நாட்டிற்கானது இல்லை. பன்னாட்டு நிறுவனங்களினுடைய வியாபாரத்தை இந்தியா முழுவதும் நிர்வகிப்பதற்கான ஒரு அமைப்பாக மாறியுள்ளது.

உலக அளவில் தென்கொரியா நாடு, அறிவியல் எழுத்தறிவில் முதல் நிலையில் உள்ளது. அதாவது, அந்நாட்டில், 85 சதவீதம் பேர் அறிவியல் எழுத்தறிவு பெற்றவர்களாக உள்ளனர். அடுத்ததாக, சீனாவில், 70 சதவீதம் அறிவியல் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.

பன்னாட்டு நிறுவனருக்கு பயன்


நமது இந்தியாவை பொறுத்தவரை அறிவியல் எழுத்தறிவு ஒற்றை இலக்கத்தில் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

நமது மாணவர்களின் அறிவியல் அறிவும் திறமையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தான் பயன்படுகிறது. ஒரு இந்திய மாணவர், 5 ஆயிரம் ரூபாய் செலவில் ஒரு கையடக்க லேப்டாப்பை கண்டுபிடித்தார். ஆனால் அவரது கண்டுபிடிப்பு நமது மக்களுக்கு பயன்படாத வகையில், பன்னாட்டு நிறுவனங்கள் பார்த்து கொண்டன. இந்த நிலை மாற வேண்டும்.

நவீன அறிவியல் வளர்ச்சிகளை கருத்தில் கொண்டு மாணவர்கள் தங்கள் சிந்திக்கும் ஆற்றலையும் அறிவித்திறனையும் வளர்த்து கொள்ளும் வகையில் கல்வி அமைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதில், பள்ளி பி.டி.ஏ., தலைவர் டட்லி, ஆதிதிராவிடர் நல விடுதி பொறுப்பாளர் வேணுகோபால் உட்பட, மாணவர்கள் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். ஆசிரியர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us