/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க முயற்சி; விவசாயிகள் பரண் அமைத்து கண்காணிப்பு
/
யானைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க முயற்சி; விவசாயிகள் பரண் அமைத்து கண்காணிப்பு
யானைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க முயற்சி; விவசாயிகள் பரண் அமைத்து கண்காணிப்பு
யானைகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க முயற்சி; விவசாயிகள் பரண் அமைத்து கண்காணிப்பு
ADDED : ஏப் 23, 2024 10:12 PM

கூடலுார் : கூடலுார் அருகே, காட்டு யானைகளிடமிருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க, விவசாயிகள் மரங்களில் பரண் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
கூடலுார் பகுதி விவாசாயிகள் வயல்களில் பருவமழை காலங்களில் நெல் விவசாயமும்; கோடையில் காய்கறி, நேந்திரன் வாழை உள்ளிட்ட பயிர்களை உற்பத்தி செய்து வருகின்றனர். விவசாய தோட்டங்களில் இரவு நேரங்களில் நுழையும் காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தி நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை தடுக்க வனத்துறை சார்பில், பல பகுதிகளில் அகழி அமைத்துள்ளனர்.
விவசாயிகள் பலர் தோட்டத்தை சுற்றி சோலார் மின்வேலியும் அமைத்துள்ளனர். விவசாய தோட்டத்திற்கு நுழையும் யானைகளை வனத்துறையினரும் விரட்டியும் வருகின்றனர்.
எனினும், காட்டு யானைகள் விவசாய தோட்டத்தில் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இதனால், புளியம்பாறை உள்ளிட்ட பல பகுதி தோட்டங்களில் உள்ள மரங்களில் பரண்அமைத்து, இரவில் அதில் தங்கி யானைகள் நுழைவதை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'காட்டு யானைகள் விவசாய தோட்டத்துக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் அவைகள், விவசாய தோட்டத்திற்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, நேந்திரன் வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை பாதுகாக்க, தோட்டத்தில் பரண் அமைத்து, இரவில் அதில் தங்கி யானைகளை தோட்டத்துக்குள் நுழைவதை கண்காணித்து, அதனை விரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம்,' என்றனர்.

