/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஹெத்தையம்மன் திருவீதி உலா பக்தர்கள் சிறப்பு தரிசனம்
/
ஹெத்தையம்மன் திருவீதி உலா பக்தர்கள் சிறப்பு தரிசனம்
ஹெத்தையம்மன் திருவீதி உலா பக்தர்கள் சிறப்பு தரிசனம்
ஹெத்தையம்மன் திருவீதி உலா பக்தர்கள் சிறப்பு தரிசனம்
ADDED : ஏப் 08, 2024 11:46 PM

ஊட்டி;ஊட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் விழாவில் ஹெத்தையம்மன் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஊட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 15ம் தேதி துவங்கி, இம்மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. நாள் தோறும், அம்மனுக்கு அபிஷேக மலர் அலங்கார வழிபாடு நடத்தப்பட்டு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் உபயதாரர்களின் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. விழாவின் ஒரு நிகழ்வாக நேற்று, படுகரின மக்களின் ெஹத்தையம்மன் திருவீதி உலா கோவிலிலிருந்து, 2:00 மணிக்கு புறப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் ெஹத்தையம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், மாவட்ட செயலாளர் வினோத் உட்பட கட்சியினர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

