ADDED : ஏப் 01, 2024 12:21 AM

கூடலுார்;கூடலுாரில் லோக்சபா தேர்தல் குறித்து நடந்த விழிப்புணர்வு மராத்தான் போட்டியில், 280 பேர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்ட நிர்வாகம், 'ரோட்டரி கிளப் ப்ளூ மவுண்டன்' சார்பில், லோக்சபா தேர்தல் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மராத்தான் போட்டி நடந்தது.
நகராட்சி அலுவலகம் அருகே, துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை ரோட்டரி கிளப் தலைவர் எல்டோதாமஸ் துவக்கி வைத்தார். ஊர்வலம் புதிய பஸ் ஸ்டாண்ட் நிறைவு பெற்றது.
தொடர்ந்து, டி.எஸ்.பி., வசந்தகுமார், உதவி வன பாதுகாவலர் கருப்பையா முன்னிலையில், ஆர்.டி.ஓ., செந்தில்குமார் மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார்.
மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், 5 கி.மீ., நடந்த மாரத்தான் போட்டி, தொரப்பள்ளியில் நிறைவு பெற்றது.
அங்கு பரிசளிப்பு விழா நடந்தது. அதில், பொது பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்ற ரங்கராஜ், பசுபதி, ஹரிதாஸ் ஆகியோருக்கு முறையே, 10001 ரூபாய், 5001, 3001 ரூபாய்; பெண்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்ற சப்னா, திவ்யா, லாவண்யா ஆகியோருக்கு முறையே, 5001 ரூபாய், 3001, 2001 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியில், உதவி வன பாதுகாவலர், தீயணைப்பு நிலைய அலுவலர் மார்ட்டின் உள்ளிட்ட, 280 பேர் பங்கேற்றனர்.
