ADDED : ஆக 20, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;தமிழ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின், 51ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், சங்க வளாகத்தில் நடந்தது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ் சங்கத்தின் புதிய தலைவராக சோலைமலை தேர்வு பெற்றார். முன்னாள் தலைவர் தாமோதரன், புதிய தலைவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
மேலும் துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், இயக்க செயலர், 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.