ADDED : ஜூலை 16, 2026 06:26 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே பிதர்காடு பஜார் பகுதியை ஒட்டிய கிராமப் பகுதிகளில், ஒற்றை ஆண் யானை உலா வருகிறது.
நேற்று காலை, 10:00 மணிக்கு, பரபரப்பான பஜாருக்கு மத்தியில் யானை உலா வந்தது. வனத்துறையினர் யானையை விரட்டி வந்ததால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் சாலைக்கு வராமல் தடுக்கப்பட்டனர். இதனால், எந்த பாதிப்புகளும் ஏற்படாமல், யானையை வனச்சரக அலுவலகத்தை ஒட்டிய வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. தொடர்ந்து, யானை சாலைக்கு வராமல் தடுக்கும் வகையில், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனத்துறையினர் கூறுகையில்,‘ இந்த யானை இரவு மட்டுமல்லாமல் பகலிலும் சாலையில் உலா வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,’ என்றனர்,
-
