/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் யானை: போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் யானை: போக்குவரத்து பாதிப்பு
ADDED : மார் 11, 2025 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : பந்தலுார் அருகே தேவகிரி எந்த இடத்தில், சாலை ஓரம் நின்ற யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேவாலா, தேவகிரி, பந்தலுார் வழியாக, தமிழக எல்லையோர கிராமங்கள் மற்றும் வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. அதில், தேவகிரி என்ற இடத்தில் சாலை ஓரத்தில், பகல் நேரங்களில் யானை நின்று, சாலையில் வரும் வாகனங்களை துரத்துவதால் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன், காரை உருட்டி விட்டதில், காரில் பயணம் செய்தவர் உயிர் தப்பினார். எனவே, இந்த யானையை கண்காணித்து, அடர்த்தியான வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.