/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கருப்பு கொடி கட்ட முடிவு
/
யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கருப்பு கொடி கட்ட முடிவு
யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கருப்பு கொடி கட்ட முடிவு
யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கருப்பு கொடி கட்ட முடிவு
ADDED : மே 09, 2024 11:37 PM
கூடலுார்:யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, வீடு, கடைகளில் கருப்பு கொடி கட்ட முடிவு செய்துள்ளனர்.
கூடலுார் அ.தி.மு.க., நகர அலுவலகத்தில், 'யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை' ரத்து செய்ய எடுக்க வேண்டி நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், எம்.எல்.ஏ., பொன்ஜெயசீலன் தலைமை வகித்து பேசுகையில், ''யானைகள் வழித்தட வரைவு அறிக்கையில், கூடலுாரில் மூன்று வழித்தடங்களை தயாரித்துள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில், இந்த வரைவு திட்டம் குறித்து வனத்துறையினர் குறுகிய காலத்தில் அறிக்கை வெளியிட்டு, மே 5ம் தேதிக்குள் மக்கள் கருத்துக்களை பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
இதில் உள்நோக்கம் உள்ளது. மக்கள் பாதிக்கும் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்,''என்றார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்: 'யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை, ரத்து செய்ய வலியுறுத்தி, கூடலுார் பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில், 13ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு கருப்பு கொடி கட்டுவது; இதில் தீர்வு இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவது,' என, முடிவு செய்யப்பட்டது.