/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சின்கோனா வயல் பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்
/
சின்கோனா வயல் பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்
சின்கோனா வயல் பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்
சின்கோனா வயல் பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்ட யானைகள்
ADDED : மே 01, 2024 12:31 AM

பந்தலுார்:பந்தலுார் சின்கோனா வயல் பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலுார் அருகே சேரம்பாடி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, காபிகாடு, சேரங்கோடு, சின்கோனா, காவயல், கண்ணம்வயல் உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளன.
தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதிகள் முழுவதும் காய்ந்து, யானைகளுக்கான உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால், கிராமங்களை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதிகள் மற்றும் புதர் பகுதிகளை நாடி வர துவங்கி உள்ளன.
அதில், கடந்த வாரம் தொடர்ச்சியாக கோழிக்கோடு செல்லும் சாலை ஓரத்தில், காபிக்காடு என்ற இடத்தில், 20-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் தற்போது இடம்பெயர்ந்து, வேறு பகுதிகளுக்கு சென்று உள்ளது.
இந்நிலையில், குட்டிகளுடன், 8 யானைகள், சேரங்கோடு அருகே, சின்கோனா வயல் பகுதியில் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் படைச்சேரி மற்றும் டான்டீ தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் வகையில், வனத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.