/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பண்ணையில் நுழைந்த யானைகள்; பட்டர் புரூட், பாக்கு செடிகள் சேதம்
/
பண்ணையில் நுழைந்த யானைகள்; பட்டர் புரூட், பாக்கு செடிகள் சேதம்
பண்ணையில் நுழைந்த யானைகள்; பட்டர் புரூட், பாக்கு செடிகள் சேதம்
பண்ணையில் நுழைந்த யானைகள்; பட்டர் புரூட், பாக்கு செடிகள் சேதம்
ADDED : மார் 05, 2025 10:06 PM

கூடலுார்; கூடலுார் தோட்டக்கலை பண்ணையில் நுழைந்த, காட்டு யானைகள், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தயாராக இருந்த பட்டர் புரூட், பாக்கு நாற்றுகளை சேதப்படுத்தியது.
கூடலுார், நாடுகாணி அருகே உள்ள பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், தேயிலை, காபி, குறுமிளகு, பட்டர் புரூட், பாக்கு, கிராம்பு, கருகப்பட்டை உள்ளிட்ட பல்வேறு விவசாய பயிர்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் நுழைந்த யானைகள் நர்சரியை சேதப்படுத்தி, அங்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தயாராக இருந்த, 5,000க்கும் மேற்பட்ட பட்டர் புரூட், 2,000க்கும் மேற்பட்ட பாக்கு நாற்றுகளை சேதம் செய்தன. சேதமடைந்த செடிகளை, தோட்டக்கலை அலுவலர் விஜய்ராஜ், வனத்துறையினர் ஆய்வு செய்தனர். யானைகளை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'காட்டு யானைகள் நர்சரியை சேதப்படுத்துவதை தவிர்க்க, நிர்வாக பகுதியை சுற்றி மின் வேலி அமைக்க வேண்டும்,' என்றனர்.