/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பலாப்பழங்கள் தேடி வரும் யானைகள்: சாலையோரம் பழம் விற்பனைக்கு தடை
/
பலாப்பழங்கள் தேடி வரும் யானைகள்: சாலையோரம் பழம் விற்பனைக்கு தடை
பலாப்பழங்கள் தேடி வரும் யானைகள்: சாலையோரம் பழம் விற்பனைக்கு தடை
பலாப்பழங்கள் தேடி வரும் யானைகள்: சாலையோரம் பழம் விற்பனைக்கு தடை
ADDED : ஏப் 26, 2024 01:42 AM

கூடலுார்;'கூடலுாரில் காட்டு யானைகளால் வாகனகளுக்கு ஆபத்து உள்ளதால், மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் பலாப்பழங்கள் விற்பனை செய்ய கூடாது,' என, வனத்துறை தடை விதித்துள்ளனர்.
கூடலுாரில் தற்போது பலாப்பழம் சீசன் துவங்கி உள்ளதால், காட்டு யானைகள் அதனை தேடி வருவது அதிகரித்துள்ளது.
இவைகளால் ஆபத்து ஏற்படும் என்பதால், குடியிருப்பு அருகே, மரங்களில் உள்ள பலா காய்களை அகற்ற வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில், முதுமலையில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், தொரப்பள்ளியை ஒட்டிய முதுமலை வனத்தில் வசிக்கும் யானைகள், இரவில் அகழியை கடந்து தொரப்பள்ளி, குணில், அள்ளூர்வயல் பகுதிக்குள் நுழைந்து பலாப்பழங்களை ருசித்து செல்கிறது.
கடந்த வாரம், இரவு தொரப்பள்ளிக்குள் நுழைந்த காட்டு யானை, அதிகாலை, 5:00 மணிக்கு சுற்றுலா பயணியை தாக்கி சென்றது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, வனத்துறையினர் காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் தீவிரப் படுத்தி உள்ளனர்.
மேலும், மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள, பலா பழங்களை யானைகள் தேடி வரும் போது, சுற்றுலா வாகனங்களை தாக்கும் அபாயம் உள்ளது.
இதனைத் தடுக்க, 'சாலையோரம், பலா பழம் விற்பனை செய்யக்கூடாது' என, வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், வனவர் வீரமணி நேற்று சாலையோர பலா பழக் கடைகளை ஆய்வு செய்து, அவற்றை அகற்ற உத்தரவிட்டார்.

