/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
படுகர்கள் பற்றிய ஆராய்ச்சி அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 01, 2024 02:24 AM

ஊட்டி;'படுகர்களை பற்றிய ஆராய்ச்சி அர்த்தமுள்ளதாகவும், மேம்பாட்டிற்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்,' என, ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில், படுகர் இன மக்களின் வாழ்வியல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சர்வதேச எழுத்தாளரும் அறிஞருமான கரேத்டேவி தலைமை வகித்தார். நீலகிரி ஆவண காப்பகத்தின் நிறுவனர் வேணுகோபால் பேசியதாவது:
நீலகிரியில் வாழும் படுகர்கள் மற்றும் பழங்குடியினர் நீண்ட காலமாக ஆராய்ச்சி மற்றும் அறிவு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகின்றனர். இத்தகைய ஆய்வுகள் நெறிமுறை மற்றும் மரியாதையுடன் நடத்தப்படுவதை படுக சமூகம் உறுதிப்படுத்த விரும்புகிறது.
படுகரின பாரம்பரிய அறிவு, அறிவுசார் சொத்தாக இருந்தாலும், பழங்குடியினர் அல்லாத ஆராய்ச்சியாளர்கள் படுகர்கள் மற்றும் நீலகிரி பற்றி நிபுணர் அந்தஸ்தை கோருவது முரண்பாடாக உள்ளது.
படுகர் பற்றிய ஆராய்ச்சி அர்த்தமுள்ளதாகவும், அவர்களின் தேவைகள், ஆர்வங்கள், முன்னுரிமைகள் மற்றும் மேம்பாட்டிற்கு பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். அதில், கல்வி, தொழில் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்திற்கு, படுகர் அமைப்புகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.