தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சூழல் பாதிக்காமல் கட்டமைப்பு பணிகள் உலக புவி தினத்தில் வலியுறுத்தல்

சூழல் பாதிக்காமல் கட்டமைப்பு பணிகள் உலக புவி தினத்தில் வலியுறுத்தல்

சூழல் பாதிக்காமல் கட்டமைப்பு பணிகள் உலக புவி தினத்தில் வலியுறுத்தல்


ADDED : ஏப் 23, 2024 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 02:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி;'நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.

உலக புவி தினத்தை முன்னிட்டு, 'கார்டன் ஆப் ஹோப் டிரஸ்ட்' சார்பில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், புவி பாதுகாப்பு குறித்து, 'நீலகிரியை நேசிப்போம் என்ற தலைப்பில்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது புவி பாதுகாப்பு குறித்து பதாகைகளை ஏந்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நீலகிரி பழங்குடியினக்குழு உறுப்பினர் வாசமல்லி பேசியதாவது:

உலகம் முழுவதும் 175 நாடுகள் இந்த நாளை கடைப்பிடிக்கின்றன. சூரிய குடும்பத்தில் பூமி மட்டுமே உயிரினங்கள் வாழ தகுதி படைத்ததாக உள்ளது. நம்மை தாங்கும் பூமியை நாம் பாதுகாக்க வேண்டும். இந்த ஆண்டு, 'பிளாஸ்டிக்கில்' இருந்து பூமியை பாதுகாப்பது கருப்பொருளாக கடைபிடிக்கப்படுகிறது.

எனவே, இயற்கை வளம், சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அதிக அளவில் சுற்றுலா வாகனங்கள் வருவதால், சுற்றுச்சூழலுக்கும், உள்ளூர் மக்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, வாகனங்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் ஏற்படுத்த வேண்டும்.

நீலகிரியில் நிலத்தின் தன்மையை அறியாமல் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டதால், கடந்த பருவமழையின்போது மண் சரிவு பாதிப்பு அதிக அளவு ஏற்பட்டது. எனவே, நீலகிரியின் உயிர்ச்சூழல் மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுத்தாதவாறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். புவி மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் திரளான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us